நாட்டுக்காக உழைத்தோம், அதற்கான விளைவுகளைச் சந்திக்கிறோம் - ஞானசாரர்
தாம் தப்பிச் செல்லப் போவதில்லை என்றும், நீதிமன்றத்தில் சரணடைந்து சட்டத்திற்குக் கீழ்ப்படிவதாகவும் ஞானசார தேரர், தெரிவித்தார். நீதிமன்றத்திற்கு வெளியே இன்று (16) செய்தியாளர்களிடம் பேசிய ஞானசார தேரர்,
உயர் நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து தாம் தலைமறைவாகிவிட்டதாக சமூக வலைதளங்களிலும் சில நம்பிக்கையான ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகியுள்ளதாகக் குறிப்பிட்டார்.
"பலவீனமானவர்களே தலைமறைவாகி தப்பிச் செல்வார்கள். நாங்கள் நாட்டுக்காக உழைத்தோம், அதற்கான விளைவுகளைச் சந்திக்கிறோம். நாங்கள் பயப்படவில்லை, தப்பியோடவும் மாட்டோம்"
தான் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும், நீதிமன்றத்திலும் சட்டத்தின் முன்னும் சரணடையவுள்ளதாகவும் ஞானசார தேரர் தெரிவித்தார்.

Post a Comment