கேரளாவில் இப்படியும் நிகழ்ந்தது (வீடியோ)
கேரளம் மலப்புரம் மாவட்டம் கோட்டக்கல் பாலத்தறையில் ஒரு வீட்டில் வளர்க்கப்படும் கோழி இட்ட முட்டை அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
வழக்கத்தை விட பெரியதாக இருந்த அந்த முட்டையை உடைத்துப் பார்த்தபோது, உள்ளே இன்னொரு முழு முட்டை இருந்தது.
விஞ்ஞானத்தில் இதற்கு Egg within an Egg என்று பெயர். உலகில் லட்சத்தில் ஒரு கோழிக்கு மட்டுமே இப்படி நடக்கும் என்கிறார்கள் நிபுணர்கள்.
இது எப்படி நடக்கிறது தெரியுமா? கோழி திடீரென பயப்படும்போது, ஏற்கனவே உருவான முட்டை வெளியே வராமல் உள்ளேயே பின்னோக்கி சென்று விடுகிறது.
அதே நேரத்தில் அடுத்த முட்டை உருவாகத் தொடங்கும்போது, பழைய சிறிய முட்டை புதிய பெரிய முட்டைக்குள் சிக்கிக் கொள்கிறது. இரண்டுக்கும் சேர்த்து ஒரே ஓடு உருவாகி விடுகிறது.
இது அதிசய கோழி இல்லை, இயற்கையின் சின்ன குழப்பம் தான்.
சுருக்கமாக சொன்னால் கோழியின் கருக்குழாய் கொஞ்சம் ரிவர்ஸ் கியர் போட்டுவிட்டது என்று சொல்லலாம்.

Post a Comment