Header Ads



அனோஜன் விவகாரம் - வெளிவிவகார அமைச்சின் அறிக்கை இதோ


சவுதி அரேபியாவில் உள்ள அனோஜன் சிவராசாவின் விவகாரத்தை வெளிவிவகார அமைச்சு உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. சவுதி அரேபிய இராச்சியத்தில் தற்போது சட்ட நடவடிக்கைகளுக்கு முகங்கொடுத்து வரும் இலங்கை பிரஜையான  அனோஜன் சிவராசாவின் விவகாரத்தை வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு உன்னிப்பாகக் கவனித்து வருகிறது.


ரியாத்தில் உள்ள இலங்கைத் தூதரகம் மூலமாகவும், கொழும்பில் உள்ள சவுதி அரேபிய இராச்சியத்தின் தூதரகத்துடனான ஒருங்கிணைப்புடனும் இவ்விவகாரம் தொடர்பான முன்னேற்றங்களை அமைச்சு தொடர்ந்து கண்காணித்து வருகின்றது.


ராஜதந்திர வழிமுறைகள் ஊடாக சவுதி அரேபியாவின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் அமைச்சு தொடர்ந்து தொடர்பில் இருப்பதோடு,  அனோஜன் சிவராசாவின் நலன்களைப் பாதுகாப்பதற்கும் அவருக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்குவதற்கும் உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.


வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு

கொழும்பு 01

18 செப்டம்பர் 2026

No comments

Powered by Blogger.