Header Ads



இஸ்ரேல் வேலைவாய்ப்புகளுக்காக சென்றுள்ள 11,607 இலங்கையர்கள்


இஸ்ரேல் வேலைவாய்ப்புகளுக்காகத் தெரிவுசெய்யப்பட்ட 204  தொழிலாளர்களுக்கு விமான டிக்கெட்டுகள் வழங்கும் நிகழ்வு இன்று (18) பணியகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.


இவர்கள் ஹோட்டல், உணவகம், தொழிற்துறை மற்றும் விவசாயம் ஆகிய துறைகளில் வேலைவாய்ப்புகளுக்காகத் தெரிவுசெய்யப்பட்ட இலங்கையர்கள் ஆவர். இதில் ஹோட்டல் துறைக்கு 43 பேரும், உணவகத் துறைக்கு 144 பேரும், தொழிற்துறைக்கு 16 பேரும், விவசாயத் துறைக்கு ஒருவரும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.


இஸ்ரேல் வேலைவாய்ப்புகளுக்காக இதுவரை மொத்தம் 11,607 பேர் சென்றுள்ளதாகப் பணியகம் தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.