Header Ads



கோட்டாபயவின் மற்றுமொரு மோசடி அம்பலம்


கோட்டாபயவின் தனிப்பட்ட செயலாளராக செயற்பட்ட சுகீஸ்வர பண்டாரவுக்கு வழங்கப்பட்டதாக கூறப்படும் சம்பளப் பணம், உண்மையில் கோட்டாபயவின் சகோதரிகளில் ஒருவரின் மகனின் வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கீழ் சிறப்புத் திட்டங்களின் பணிப்பாளர் நாயகமாகப் பணியாற்றிய காலத்தில் 220 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான தொகையை குற்றவியல் ரீதியாக தவறாக பயன்படுத்தியமை மற்றும் நம்பிக்கையை மீறியமை ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் அவர் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.


 சுகீஷ்வர பண்டாரவின் கணக்கில் நான்கு சந்தர்ப்பங்களில் 5 மில்லியன் ரூபாயும், 79 தனித்தனி சந்தர்ப்பங்களில் 11.4 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான தொகையும் வைப்பிலிடப்பட்டதாக மத்திய புலனாய்வுப் பிரிவு மேலதிக அறிக்கை மூலம் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தது.


முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் தனிப்பட்ட செயலாளர் பதவிக்காக ஒதுக்கப்பட்ட சம்பளப் பணம், ராஜபக்சர்களின் சகோதரிகளில் ஒருவரின் மகனின் வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

No comments

Powered by Blogger.