குர்ஆனை வாசிக்க துவங்கிய காவ்யா ஸ்ரீநிவாஸ்
"எனது மத விசுவாசம் எனது பலம். சமயம் கிடைக்கும் போதெல்லாம் கோவிலுக்கு சென்று கடவுளை வழிபடும் வழக்கம் எனக்குண்டு. எனது இஷ்ட தெய்வம் கொடுங்ஙலூர் பகவதி அம்மன். அன்றாட வாழ்வில் பலமுறை பல்வேறு கஷ்டங்களை சந்தித்துள்ளேன். ஆனால் ஒருமுறை கூட அந்த கஷ்டம் அனுபவித்த தினங்களில் கடவுளை பழித்தது கிடையாது. நம்முடைய விதி என்று கருதி அதனை எதிர்கொண்டு முன்னேறுவேன். எனது மத நம்பிக்கை என்னை தளரவிடாது கூடுதல் சக்தியை தரும். வேறு வேறு மத வேதங்களில் கூறப்பட்ட கருத்துக்களையும் அறிந்து கொள்வேன்.
நான் சமீப காலங்களில் திருக்குர்ஆன் வாசித்து வருகிறேன். அதில் தவறுகள் காண்பதல்ல எனது நோக்கம். மாறாக யதார்த்தத்தில் குர்ஆன் என்ன கற்பிக்கிறது என்று வாசித்து சுயம் தெரிந்து கொள்வதற்கு வாசிக்கிறேன். நான் வாசிக்கும் விஷயங்கள் குறித்து சிந்திக்க, என்னுள் கேள்வி எழுப்பிட, அபிப்பிராயம் சொல்லவும் எனக்கு முழு உரிமை உண்டு.
நான் இதுவரை வாசித்த குர்ஆனின் பக்கங்களில் எனக்கு எதுவும் தவறாக தென்படவில்லை. திருக்குர்ஆனின் மிகப்பெரிய 2-வது அத்தியாயம் அல் பகராவிலிருந்து மனித வாழ்வின் அத்தனைக்குமான வழிகாட்டுதல்களை தெரிய முடிந்தது.
கடன், வட்டி, குடும்ப ஜீவிதம் குறித்து விரிவான கருத்துக்கள் காணலாம். வட்டியை மிகவும் கண்டிக்கும் வசனமும் வியாபாரமும் வட்டியும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத விஷயங்கள் என்றும், வட்டியை விட்டு விலகிட கண்டிப்புடன் கூறும் 2:275, 2:278, 2:279 வசனங்கள் குர்ஆனில் காண முடிந்தது.
கடன் வாங்குபவர் கொடுப்பவர் இருவருக்கும் இடையே நிபந்தனைகள் மிக தெளிவாக 2:282ல் கூறுகிறது.
மேலும் அல் பகறா அத்தியாயம் முழுக்க குடும்ப வாழ்வின் பல்வேறு நிலைகள் குறித்து தெளிவாக பேசுகிறது. திருமணம், இல்லற பந்தம், குழந்தை பராமரிப்பு, பெற்றோருக்கு செய்ய வேண்டிய கடமைகள் உட்பட மனித வாழ்வின் முக்கிய அம்சங்கள் குறித்து விரிவாக வலியுறுத்தும் குர்ஆன் பாலூட்டுவது குறித்து கூட 2:233 லும், கணவன் மனைவி இடையேயான திருமண பந்தம் முறிவு குறித்து 2:228 ம் வழிகாட்டுவதை காண முடிந்தது.
நான் குர்ஆனை வாசிக்க துவங்கிய பின்னர் எனக்கு தோன்றியது, எந்தவொரு மத கிரந்தத்தையும் அதன் ஏதாவது ஒரு வரியை மட்டும் வாசித்து கருத்து சொல்வதை தவிர்த்து அந்த கிரந்தத்தை முழுமையாக வாசித்து உணர்தல் அவசியம் " என்று
திருக்குர்ஆனுடனான தனது வாசிப்பு அனுபவத்தை பகிர்ந்துள்ளார் காவ்யா...
Colachel Azheem

Post a Comment