உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் இறுதி எச்சரிக்கை
2025/2026 மதிப்பீட்டு ஆண்டிற்கான (Year of Assessment) இறுதி வரிச் செலுத்துகை 2026 செப்டம்பர் 30 அன்று செலுத்தப்பட வேண்டும் என்பதை உள்நாட்டு இறைவரித் திணைக்களம் (IRD) வரி செலுத்துவோருக்கு நினைவூட்டியுள்ளது.
வரி செலுத்துகைகளை மேற்கொள்ளும்போது, சரியான வரி செலுத்துவோர் அடையாள எண் (TIN), வரி வகை, மதிப்பீட்டு ஆண்டு மற்றும் ஆவண அடையாள எண் (DIN) ஆகியவை பயன்படுத்தப்படுவதை உறுதி செய்யுமாறு வரி செலுத்துவோரைத் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.
வரிகளைச் செலுத்தத் தவறினாலோ அல்லது தாமதமாகச் செலுத்தினாலோ வட்டி மற்றும் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கும் அறிவிப்புடன் இந்த நினைவூட்டலும் வெளியிடப்பட்டுள்ளது.

Post a Comment