Header Ads



அடுத்த தடவையும் ஆட்சியை பிடிப்போம்


"திருடர்களுக்குத் தண்டனை வழங்குவதில் எந்த எல்லைகளும் இல்லை. இந்தத் தடவை எஞ்சியுள்ள மூன்று ஆண்டுகளிலும் செய்வோம். அடுத்த தடவையும் பிடிப்போம். இவை பெரிய அளவிலான விசாரணைகள் என்பதால் சர்வதேசத்தின் உதவி தேவைப்படுகிறது, இதனால் தாமதமாகிறது. எங்களுக்கு எந்த விதத்திலும் பழிவாங்கும் எண்ணம் கிடையாது. நான் நேர்மையாகச் சொல்கிறேன், 


எவரிடமிருந்தும் பழிவாங்கும் நோக்கம் நமக்கு இல்லை. நாங்கள் ஏன் பழிவாங்க வேண்டும்? அவர்களைப் போல எங்களுக்குக் காணி வழக்குகளோ, குடும்பத் தகராறுகளோ இல்லை. தனிப்பட்ட முறையில் பழிவாங்கும் நோக்கம் எங்களுக்கு இல்லை. 


இவை எதுவுமே பழிவாங்கல் கிடையாது. பழிவாங்கும் வரலாறு எப்படிப்பட்டது என்பதும் எங்களுக்குத் தெரியும். 2010 ஆம் ஆண்டில் சரத் பொன்சேகா ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டார். தேர்தல் முடிவுகள் வந்துகொண்டிருந்தபோது, அவர் எம்முடன் ஒரு தனியார் விடுதியிலேயே முடிவுகளைக் கேட்டுக்கொண்டிருந்தார். அந்த விடுதி முழுவதையும் இராணுவத்தினர் முற்றுகையிட்டனர். தேர்தல் முடிவுகள் வரும்போதே முற்றுகையிட்டனர். அதுதான் பழிவாங்கும் முறை. அதன்ப பிறகு அவரது பணிமனைக்குள் இராணுவக் குழுவினர் புகுந்து, தமக்குச் சாதகமான ஜீப் வண்டியில் ஏற்றி கடத்திச் சென்றனர். தேர்தல் முடிந்து ஒரு வாரம் முடிவதற்குள்ளேயே இவ்வாறுதான் பழிவாங்கினார்கள். 


ஆனால் நாங்கள் பழிவாங்குவதில்லை. 2019 இல் ஜனாதிபதியான பின்னர், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) 600 அதிகாரிகளுக்கு வெளிநாட்டுப் பயணத் தடை விதிக்கப்பட்டது. பிரதமரை நியமிப்பதற்கு முன்பே CID பணிப்பாளர் இடமாற்றம் செய்யப்பட்டார்".


கம்பஹாவில் இன்று (27) நடைபெற்ற மக்கள் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். 

No comments

Powered by Blogger.