கிரிக்கெட் வரலாற்றின் இரண்டாவது வீரர்
இந்தியாவின் நட்சத்திம் விராட் கோலி, ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 15,000 ரன்களைக் கடந்த கிரிக்கெட் வரலாற்றின் இரண்டாவது வீரர் என்ற சிறப்பைப் பெற்றுள்ளார். இதன் மூலம் சச்சின் டெண்டுல்கர் இடம்பெற்றுள்ள இந்த உயரிய மைல்கல் பட்டியலில் அவரும் இணைந்துள்ளார்.
திருவனந்தபுரத்தில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் 'பவுண்டரி' ஒன்றை அடித்ததன் மூலம் கோலி இந்த மைல்கல்லை எட்டினார். தனது 303-வது ஒருநாள் இன்னிங்ஸில் அவர் இச்சாதனையைப் படைத்தார்.
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான போட்டியில் விராட் கோலி தனது 55-வது ஒருநாள் சதத்தை அடித்தார். சிக்ஸர் அடித்து சதத்தை நிறைவு செய்த அவர், 88 பந்துகளில் 139 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இந்திய அணிக்கு வெற்றியைப் பெற்றுக் கொடுத்தார்.
2027-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கோப்பைப் போட்டியே இந்திய அணிக்காகத் தான் பங்கேற்கும் கடைசித் தொடராக இருக்கும் என்றும் கோலி குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment