Header Ads



இந்தியாவில் இஸ்லாமிய வெறுப்பு - இந்த நிகழ்வு எடுத்துக்காட்டுகிறது.


உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த புஷ்ரா பானு Bushra Bano என்ற முஸ்லிம் பெண்மணி யுபிஎஸ்சி தேர்வு எழுதி ஐபிஎஸ் ஆக தேர்வு பெற்று மேற்கு வங்கத்தில் பணியாற்றி வருகிறார். 


அலிகர் பல்கலைக்கழக சிவில் சர்வீஸ் பயிற்சி மையத்தில் பயிற்சி பெறும் மாணவர்களிடையே இணையதளம் வழியாக புஷ்ரா பானு பேசியுள்ளார். பெரும்பாலும் முஸ்லிம் மாணவர்கள் உள்ள அந்த வகுப்பில் அவர் அஸ்ஸலாமு அலைக்கும் எனும் முகமன் கூறி பேசுகிறார். இடையிடையே இன்ஷா அல்லாஹ் என்ற வார்த்தையும் நன்றி கூறும் ஜஸாக்கல்லாஹ் ஹைரன் என்ற வார்த்தையும் அவர் கூறுகிறார்.


இதை அவர் ஏதோ பெரும் தவறை செய்து விட்டவர் போலவும், அமைப்புச் சட்டத்திற்கு எதிராக செயல்பட்டவர் போலவும் சில இந்துத்துவ பயங்கரவாத கும்பல்கள் கொடுத்த புகாரின் பேரில் அவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். 


இந்தியாவில் எந்த அளவுக்கு இஸ்லாமிய வெறுப்பும் அதிகார மையத்தில் இந்துத்துவ சாய்வும் இருக்கிறது என்பதை இந்த நிகழ்வு எடுத்துக்காட்டுகிறது. 


அரசு அலுவலகங்களில் இஸ்ரோ போன்ற விண்வெளி ஆய்வு நிறுவனங்களில் காவல்துறை தலைமையகங்களில் வெளிப்படையாக இந்து சமய வழிபாடுகளும் சாமியார்களின் நிகழ்வுகளும் அன்றாடம் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. இஸ்ரோ விஞ்ஞானிகள் செயற்கைக்கோள் மாதிரியை திருப்பதிக்கு கொண்டு சென்று பூஜை செய்த நிகழ்வுகளும் நடந்தேறி உள்ளன. அவற்றுக்கு எதிராகவெல்லாம் எந்த முணுமுணுப்பும் எழவில்லை. 


ஆனால் முஸ்லிம் மாணவர்கள் இடத்தில் பேசுகின்ற பொழுது கூட முஸ்லிம் அதிகாரிகள் தப்பி தவறி கூட அரபு வார்த்தைகளை பேசி விடக்கூடாது. இந்தியாவின் நிலவும் வெளிப்படையான இரட்டை தன்மையின் வெளிப்பாடு இது.


Abdur Rahman See less

No comments

Powered by Blogger.