Header Ads



வாயைத் திறந்தார் மைத்திரிபால


கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த ஞானசார தேரருக்கு, அரசியலமைப்பின் பிரகாரமே, பொது மன்னிப்பு வழங்கப்பட்டது  என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.


எவ்வாறு எனினும் ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்குவது தொடர்பிலான தனது தீர்மானம் அரசியல் அமைப்பிற்கு உட்பட்ட வகையில் அந்தக் காலத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம். 19ஆம் திருத்த சட்டத்தை சட்டத்தின் பிரகாரம் காணப்பட்ட அதிகாரங்களை குறைத்ததாகவும் பதவி காலத்தை குறைத்ததாகவும் மைத்திரிபால தெரிவித்துள்ளார்.


தனக்கு பின்னர் வந்த அரசாங்கம் 19ஆம் திருத்தச் சட்டத்தில் தம்மால் அகற்றப்பட்ட அதிகாரங்களை மாற்றியமைதத்தாகவும், அதன் பின்னர் மீண்டும் ஜனாதிபதிக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கும் நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டது. எனவே இந்த நீதிமன்ற தீர்ப்பு தொடர்பில் தமக்கு எவ்வித கருத்தையும் வெளியிட முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். 

No comments

Powered by Blogger.