இந்த நகைகள் போலியானதா..?
டுபாயில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட பாதாள உலகத் தலைவர் கொண்ட ரஞ்சி தான் அணிந்திருந்த தங்கம் சீனாவின் தயாரிப்பான போலியான தங்க ஆபரணங்கள் என வெளிப்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஞ்சித் குமார அல்லது கொண்ட ரஞ்சி கடந்த மார்ச் 29ஆம் திகதி இரவு 7 மணியளவில் ஈரான், டுபாய் மீது தொடுத்த வான்வழித் தாக்குதல்களைத் தனது கையடக்கத் தொலைபேசியில் ஒளிப்பதிவு செய்துள்ளார். அதனை நண்பர்கள் மூவருக்கு அனுப்பியமையால் டுபாய் பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த காணொளிக் காட்சிகள் பரிமாறப்பட்டு 2 மணி நேரத்திற்குள் டுபாய் பாதுகாப்புப் பிரிவினர் அவரைக் கைது செய்திருந்தனர். கைது செய்யப்பட்டபோது அவரிடமிருந்த 17 பவுண் எடையுள்ள 2 தங்க மாலைகள், 18,000 திர்ஹம் பணம் மற்றும் கையடக்கத் தொலைபேசிகள் என்பன பாதுகாப்புப் பொறுப்பின் கீழ் எடுக்கப்பட்டுள்ளன.
டுபாயில் கொண்ட ரஞ்சி அங்கு தண்ணீர் போத்தல் விற்பனை வியாபாரத்தை ஆரம்பித்துள்ளதோடு, அதனால் அவர் கோல்டன் விசா ஒன்றையும் பெற்றுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Post a Comment