சிறைச்சாலையில் மகனை சென்று பார்வையிட்ட தந்தை
வெலிக்கடை சிறையில் அடைக்கப்பட்டுள்ள நாமல் ராஜபக்சவை, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நேரில் சென்று இன்று (05) சந்தித்துள்ளார்.
நேற்றைய தினம், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நாமல் ராஜபக்சவை சந்தித்து நலம் விசாரிப்பதற்காக, , வெலிக்கடை சிறைச்சாலை வளாகத்திற்கு வருகை தந்த முன்னாள் ஜனாதிபதி, சிறை அதிகாரிகளின் அனுமதியுடன் நாமல் ராஜபக்சவை நேரில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
சிறைச்சாலையின் சிறப்பு பாதுகாப்பு அறையில், 10 கைதிகளுடன் பலத்த பாதுகாப்பில் அவர் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

Post a Comment