வானவில்லைப் போல பிரித்துக் காட்ட, ஒரு கோடு வரையக்கூடிய நிலையில் நாங்கள் இல்லை.
ஆளும் கட்சிக்குள் முரண்பாட்டு நிலைமை ஏற்பட்டுள்ளதாக வெளியாகும் தகவல்களில் எவ்வித உண்மையும் கிடையாது என ஜே.வி.பி. செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
குறிப்பாக பிரதமர் ஹரினி அமரசூரியவுக்கு எதிராக உட்கட்சிக்குள்ளேயே ஒரு குழு செயற்படுவதாக வெளியாகும் செய்திகளை அவர் நிராகரித்துள்ளார்.
இத்தகைய குற்றச்சாட்டுகள் அரசியல் எதிரிகளால் உருவாக்கப்பட்ட "வேடிக்கையான நகைச்சுவை" என குறிப்பிட்டுள்ளார்.
பெலவத்தையிலுள்ள ஜே.வி.பி தலைமையகத்தை மையமாகக் கொண்ட குழுவொன்று பிரதமரின் செயல்பாடுகளைச் சீர்குலைக்க முயல்வதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை முற்றாக மறுத்து,
இன்னும் 10 ஆண்டுகள் கழிந்தாலும் அந்த யதார்த்தம் JVP மற்றும் NPP ஆகியவற்றை உண்மையில் பிரிக்க முடியாது. வானவில்லைப் போல எங்களைப் பிரித்துக் காட்டுவதற்கு ஒரு கோடு வரையக்கூடிய நிலையில் நாங்கள் இல்லை.
ஜனாதிபதி அநுரகுமார மற்றும் அமரசூரிய உள்ளிட்ட கட்சித் தலைவர்களுக்கு இடையிலான உறவு ஆழமான பரஸ்பர அன்பிலும் நம்பிக்கையிலும் கட்டியெழுப்பப்பட்டது என சுட்டிக்காட்டியுள்ளார்.

Post a Comment