Header Ads



இப்போ வாப்பா இல்ல… இனிமேல் என்ன செய்யப் போறீங்க..?”


“உங்கட வாப்பா, உங்களுக்கு என்ன சொத்து சேர்த்து வச்சிருக்கார்..?


இப்போ வாப்பா இல்ல… இனிமேல் என்ன செய்யப் போறீங்க?” என்று சிலர் கேட்கிறார்கள். அவர்களுக்கு நான் சொல்ல விரும்புவது ஒன்றுதான்… பணம்தான் மிகப்பெரிய சொத்து என்று நினைப்பது உங்கள் அறியாமை.


என் வாப்பா படிக்கவில்லை… ஆனால் கல்வியின் மதிப்பை அறிந்தவர். தான் பெறாத கல்வியை, தன் மகள் பெற வேண்டும் என்று கனவு கண்டவர். தன் மகள் ஒரு வைத்தியராக வேண்டும் என்று ஆசைப்பட்டவர்.


அந்த கனவுக்காக தன்னால் முடிந்த அனைத்தையும் செய்தவர். அவர் எனக்கு பணம், வீடு, நிலம் என்று சொத்துகளை சேர்த்து வைக்கவில்லை…


அதற்கும் மேலான சொத்தை விட்டுச் சென்றிருக்கிறார்.  கல்வி, தைரியம், நம்பிக்கை, நல்ல பண்புகள், மற்றும் “என்னால் முடியும்” என்ற மனதை.


இன்று நான் ஒரு வைத்தியராக நிற்கிறேன் என்றால், அதன் பின்னால் என் வாப்பாவின் தியாகமும்,  அவருடைய கனவும் இருக்கிறது பெற்றோருடைய மறைமுகமான பிராத்தனைகளும் தான்.


அவர் இன்று என் அருகில் இல்லை. ஆனால் அவர் என்னுள் விதைத்த கனவு இன்னும் உயிருடன் இருக்கிறது. வாப்பா எனக்கு சொத்து சேர்த்து வைக்கவில்லை…


அவர் என்னையே ஒரு சொத்தாக உருவாக்கி விட்டுச் சென்றிருக்கிறார். 🤍


அதற்காக முதலில் என் இறைவனுக்கு நன்றி  அல்ஹம்துலில்லாஹ்.


எனக்கு இப்படிப்பட்ட ஒரு தந்தையை ( தாயையும்)  தந்ததற்கும், அவருடைய அன்பையும் தியாகத்தையும் அனுபவிக்க வைத்ததற்கும், அவர்கள் கனவு கண்ட பாதையில் என்னை நடத்தி வருவதற்கும் அல்லாஹ்வுக்கு அளவற்ற நன்றி. 🤲🏻


வாப்பா… நீங்கள் இன்று என்னுடன் இல்லை என்றாலும், நான் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும்  , நான் இந்த சமூகத்திற்கு கொடுக்கும் சேவைக்கும் பின்னால் உங்கள் கனவும், உங்கள் தியாகமும் உங்களுக்கான கூலியும் நிறைந்திருக்கிறது


என் வாப்பாவின் மறுமை வாழ்க்கை சிறப்பாக அமைய பிராத்தித்தவளாக...... 


அல்ஹம்துலில்லாஹ் 

Dr. Rukshana Jawahir

No comments

Powered by Blogger.