Header Ads



வருமானங்களை குவிக்கும் சுங்கத் திணைக்களம்


இலங்கை சுங்கத் திணைக்களத்தின் வருமானம் , 2026ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் சுமார் 25 சதவீதம் அதிகரித்துள்ளதாக உத்தியோகபூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன.

ஒகஸ்ட் மாதத்திற்கான சுங்க வருமான இலக்கு 190.3 பில்லியன் ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், அந்த மாதத்தில் 219.3 பில்லியன் ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.

முதல் எட்டு மாதங்களுக்கான ஒட்டுமொத்த வருமான இலக்கை விட 28.5 சதவீதம் அதிகமாக, மொத்தம் 1,852.5 பில்லியன் ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டுள்ளது. 2026ஆம் ஆண்டுக்கான வருமான இலக்கு 2,207 பில்லியன் ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

No comments

Powered by Blogger.