Header Ads



அனோஜனுடன் தொலைபேசி வழியாக விடயங்களை கேட்டறிந்த சஜித்

 


சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜன் எனும் இலங்கையரின் பெற்றோர்கள் இன்று (21) கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்திற்கு வருகை தந்தனர்.


இச்சந்தப்பில் சிவராசா அனோஜனின் தந்தையரான தம்பிராசா சிவராசா, தாயாரான இராசமாணிக்கம் யோகலட்சுமி மற்றும் சகோதரர் சிவராசா ஹம்சிதன் ஆகியோர் கலந்து கொண்டனர். 


இவர்களுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலுக்கு மத்தியில், இலங்கைக்கான சவூதி அரேபியாவின் தூதுவரை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு, சிவராசா அனோஜன் அவர்களின் விடுதலை தொடர்பான விடய விபரங்களைக் கேட்டறிந்ததேன். 


மேலும் சவூதி சிறையில் இருக்கும் சிவராசா அனோஜனுடன் தொலைபேசி வழியாக பேசி அவரிடம் விடயங்களை கேட்டறிந்த பின்னர் நமது நாட்டு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளருக்கும் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு அவரின் விடுதலைக்காக அரசாங்கம் முன்னெடுத்துள்ள வேலைத்திட்டங்கள் குறித்தும் கேட்டறிந்தேன்.


 சாதி, மத பேதமின்றி சிவராசா அனோஜனின் விடுதலைக்காக செய்யக்கூடிய உட்சபட்ச அனைத்து முயற்சிகளையும் செய்வேன் என இங்கு பெற்றோர் மத்தியில் தெரிவித்தேன்.


எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச


www.jaffnamuslim.com

No comments

Powered by Blogger.