முதலாவது ஹாபிழாவை ளெரவிக்கும் நிகழ்வு
குர்ஆனை முழுமையாக மனனம் செய்யும் புனிதப் பயணத்தில் அடுத்தடுத்த நிலைகளில் பயின்றுவரும் முஹம்மது ஹனீபா நப்ரிஸா மற்றும் முஹம்மது சபீல் ஸஹ்மத் ஜினா ஆகிய மாணவிகளும் அவர்களின் முன்னேற்றத்தைப் பாராட்டி பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
குர்ஆனை மனனம் செய்வது என்பது தனிநபர் சாதனை மாத்திரமன்றி, ஒரு குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் பெருமை சேர்க்கும் ஆன்மீகப் பொறுப்பாகும். குறிப்பாக, பெண்களுக்கான பகுதி நேர ஹிப்ழ் கல்வியின் மூலம், குடும்பப் பொறுப்புகளுடன் இணைந்து குர்ஆனை மனனம் செய்வதற்கான வாய்ப்பை எமது பகுதி நேர மத்ரஸாக்கள் உருவாக்கி வருவது குறிப்பிடத்தக்கது.
குறிப்பு: இப்பகுதி நேர ஹிப்ழ் மத்ரஸாக்கள் ஆண்கள், பெண்களுக்கென பிரத்தியேகமாகவும், முற்றிலும் இலவசமாக இடம்பெறுவதோடு ஆர்வமுள்ள பெற்றோர்கள் பெரிய பள்ளிவாசல் காரியாலயத்தில் விண்ணப்பபடிவங்களை பெற்று இணைந்துகொள்ள முடியும்.



Post a Comment