Header Ads



வீரவன்சவை உடனடியாக பிடிக்கவும் - நீதிமன்றம் உத்தரவு


முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (21) பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளது. 


ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் இளவரசர் செயித் அல்-ஹுசைன் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த சந்தர்ப்பத்தில், கொழும்பு தும்முல்லையில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகத்தைச் சுற்றியுள்ள வீதிகளை மறித்துப் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பி​ல் சந்தேநபராக பெயரிடப்பட்டுள்ள விமல் வீரவன்ச இன்று (21) நீதிமன்றத்தில் ஆஜராகாமையினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 


கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரமவினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

No comments

Powered by Blogger.