Header Ads



உறுதிப்படுத்தப்படாத தகவல்களைப் பரப்புவதைத் தவிர்க்குமாறு கேட்டுள்ள காவல்துறை


சமூக ஊடகங்களில் பரவலாகப் பேசப்பட்ட, கேரளாவைச் சேர்ந்தவரும் 2 குழந்தைகளின் தாயுமான 32 வயது இந்தியப் பெண்மணியின் மரணத்தில், சந்தேகத்திற்குரிய சூழல் எதுவும் இல்லை என்று ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக ஷார்ஜா காவல்துறை தெரிவித்துள்ளது.


அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ள தகவலின்படி, கணவர் வேலைக்குச் சென்றிருந்த வேளையில், அல் காசிமியாவில் உள்ள தங்கள் வீட்டில் டாக்டர் அஃபீனா ரஹீம் மயங்கி விழுந்துள்ளார். மயங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட அவருக்கு முதலுதவி (CPR) அளிக்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டாலும், அவரைக் காப்பாற்ற முடியவில்லை.


மரணம் நிகழ்ந்ததற்கான காரணத்தைக் கண்டறிய தடயவியல் பரிசோதனைக்கு அரசுத் தரப்பு வழக்கறிஞர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.


அதேவேளையில் அதிகாரிகள் தங்கள் விசாரணையைத் தொடர்ந்து வருகின்றனர். அதிகாரப்பூர்வமான தகவல்களை மட்டுமே நம்புமாறும், உறுதிப்படுத்தப்படாத தகவல்களைப் பரப்புவதைத் தவிர்க்குமாறும் பொதுமக்களைக் காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

No comments

Powered by Blogger.