Header Ads



கட்டுநாயக்க விமான நிலையத்தில் குஷ் போதைப்பொருள் மீட்பு


கட்டுநாயக்க விமான நிலையத்தின் 6ஆம் இலக்க பயணப் பொதி பாதை அருகே கைவிடப்பட்டிருந்த 32  கோடி ரூபாய் பெறுமதியான குஷ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது


2 பயணப் பொதிகளுக்குள் காற்று புகாதவாறு 60 பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டிருந்த இந்த போதைப்பொருள் தொகை, நேற்று (14) தாய்லாந்தின் பேங்கொக் நகரிலிருந்து வருகை தந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான UL-405 ரக விமானத்தில் வந்த பயணி ஒருவரால் கொண்டுவரப்பட்டுள்ளது. 


விமான நிலையத்திற்குள் கைது செய்யப்படுவோம் என்ற பயத்தினால் குறித்த பயணி இந்த போதைப்பொருள் தொகையைக் கைவிட்டுத் தப்பிச் சென்றிருக்கலாம். குறித்த பயணப் பொதிகளைக் கொண்டு வந்த விமானப் பயணி யார் என்பதைக் கண்டறிவதற்காக விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.