பின்புலம் அறியாமல் காதலிப்பதால் ஏற்படும் அபாயம்
பள்ளியவத்தை, டேன் லங்கா வீதியில் வசிக்கும் தனது பெற்றோர் வீட்டிற்கு சில நாட்களுக்கு முன்பு வந்து தங்கியிருந்த கனகசபை மீகா என தெரியவந்துள்ளது.
கொலை செய்த நபர் 2020ஆம் ஆண்டு கேலி செய்தமைக்குப் பழிவாங்கும் முகமாக அவசகவெல்ல பிரதேசத்தில் நபரைக் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடையவராகும்.
குறித்த வழக்கு விசாரணையில் உள்ளது. கொலை செய்யப்பட்ட யுவுதி அந்த நபருடன் காதல் உறவைப் பேணி வந்துள்ளார்.
சந்தேகநபர் அவரைத் தொடர்ந்து சந்தேகப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தை தொடர்ந்து, வீட்டில் இருந்த அவரை குளியலறைக்கு அழைத்துச் சென்று கத்தியால் கழுத்தறுத்து, கண்களைத் தோண்டி படுகொலை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
யுவதியை கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் 25 வயதுடைய நபரின் சடலம் அத்துருகிரிய பொலிஸ் பிரிவில் நேற்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.

Post a Comment