ஈஸ்டர் தாக்குதல் பிழையானது - மனசாட்சியின் பிரகாரம் இந்த குற்றச்செயலை நான் செய்யவில்லை
சட்டம் தொடர்பில் தமக்கு நம்பிக்கை ஏற்பட்டதாகவும் விளக்கலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த காலத்தில் தாம் சட்டக் கல்லூரிக்கான நுழைவுப் பரீட்சையில் தோற்றி சித்தி அடைந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த பரிட்சையில் அகில இலங்கை ரீதியாக முதலிடத்தை தான் பெற்றுக் கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்பொழுது சட்டக் கல்லூரியில் கற்றல் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த தீர்ப்பு காரணமாக கற்கைநெறியை தொடர்வதா என்பது குறித்து மீள் பரிசீலனை செய்ய வேண்டி உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
தண்டனையை குறைக்குமாறு கேட்பதற்கு வெட்கமாக உள்ளதாகவும், இலங்கையில் இடம்பெற்ற மிகப்பெரிய ஒரு குற்ற செயல் இது எனவும், இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் குற்றவாளிகள் இவ்வாறு தண்டனையை குறைக்க கூறுவது வெட்கம் கெட்ட செயல் என நினைப்பார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
தனது மனசாட்சியின் பிரகாரம் இந்த குற்றச்செயலை தான் செய்யவில்லை என்பது தெரியும் எனவும் அதனால் தண்டனை குறைப்புக்காக கோருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த தீர்ப்பு தொடர்பில் மேல்முறையீடு செய்யவும் திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment