Header Ads



6 பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன


சதொச நிறுவனத்தினால் 6 அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. இந்த விலை குறைப்பு (26) முதல் நாடு முழுவதும் உள்ள அனைத்து லங்கா சதொச விற்பனை நிலையங்களிலும் அமுலுக்கு வருகிறது.


அதன்படி, ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் விலை 319 ரூபாயிலிருந்து 309 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.


ஒரு கிலோ வெள்ளை சீனியின் விலை 249 ரூபாயிலிருந்து 245 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.


ஒரு கிலோ சிவப்பு பருப்பின் விலை 244 ரூபாயிலிருந்து 242 ரூபாயாகவும், கோதுமை மாவின் விலை 179 ரூபாயிலிருந்து 174 ரூபாயாகவும் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


ஒரு கிலோ சிவப்பு அரிசியின் விலை 174 ரூபாயிலிருந்து 173 ரூபாயாகவும், ஒரு கிலோ வெள்ளை அரிசியின் விலை 179 ரூபாயிலிருந்து 174 ரூபாயாகவும் குறைக்கப்பட்டுள்ளதாக லங்கா சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.