63 வயது பெண்ணுக்கு பாலியல் நடவடிக்கைக்கு அழைப்பு விடுத்த 3 பேர்
63 வயது ஆஸ்திரேலியப் பெண் சுற்றுலாப் பயணி ஒருவரின் அறைக்கதவின் கீழ் பாலியல் நடவடிக்கைக்கு அழைப்பு விடுத்து ஆங்கிலத்தில் எழுதப்பட்ட துண்டுப்பிரசுரங்களைத் திணித்த குற்றச்சாட்டின் பேரில், 3 இலங்கை நபர்கள் உனவட்டுன சுற்றுலாப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கைக்கு வருகை தந்த குறித்த பெண், உனவட்டுனவில் உள்ள பிரதான ஹோட்டல் ஒன்றில் ஒரு வாரத்திற்கும் மேலாகத் தங்கியிருந்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
தெஹிவலை மற்றும் பாணந்துறைப் பகுதிகளைச் சேர்ந்த குறித்த மூன்று சந்தேகநபர்களும், ஆஸ்திரேலியப் சுற்றுலாப் பயணி தங்கியிருந்த அறைக்கு அருகிலுள்ள அறையிலேயே தங்கியிருந்ததாகப் பொலிஸார் விசாரணைகளில் கண்டறிந்துள்ளனர்.
சந்தேகநபர்கள் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட பாலியல் அழைப்புக் குறிப்புகளைப் பெண்ணின் அறைக்கதவின் கீழ் திணித்துள்ளனர்.

Post a Comment