600 மில்லியன் நிதியுதவியில், மன்னார் மாவட்ட மக்களுக்கு
மன்னார் மாவட்ட மக்களுக்கு அவசர மற்றும் தீவிர மருத்துவ சேவைகளை விரைவாகவும் ஒருங்கிணைந்த முறையிலும் வழங்குவதற்குத் தேவையான நவீன வசதிகளுடன், மன்னார் மாவட்ட பொது மருத்துவமனையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவுக்கான புதிய கட்டடம் இந்திய அரசின் 600 மில்லியன் ரூபா நிதியுதவியில் நிர்மாணிக்கப்படவுள்ளது.
இந்திய அரசின் நிதியுதவியுடன் முன்னெடுக்கப்படும் இத்திட்டத்துக்கான அடிக்கல் நடுகை செய்யும் நிகழ்வு இன்று (16.09.2026) புதன்கிழமை நடைபெற்றது.
வடக்கு மாகாண சுகாதார அமைச்சும் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களமும் இணைந்து ஏற்பாடு செய்யும் இத்திட்டத்தின் செயற்பாட்டு முகவர் சுகாதார அமைச்சு என்பதுடன், நடைமுறைப்படுத்தும் முகவர் வடக்கு மாகாண சபையாகும்.

Post a Comment