Header Ads



நீராடப் போன 4 பேரை காணவில்லை


திவுலப்பிட்டிய, படல்கம, பேரகஸ்மங்கட பகுதியில் மாஓயா ஆற்றில் நீராடச் சென்ற 3  யுவதிகள் உட்பட 4  பேர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.


இன்று பிற்பகல் 2.00 மணியளவிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


நான்கு யுவதிகளும் இளைஞர் ஒருவரும் மாஓயா ஆற்றில் நீராடச் சென்றுள்ள நிலையில், அவர்களில் நால்வர் பாதுகாப்பற்ற பகுதியில் நீராடிக்கொண்டிருந்துள்ளனர்.


அப்போது, யுவதிகளில் ஒருவர் நீரில் மூழ்கியதாகவும், அவரைப் காப்பாற்ற முயன்றபோதே ஏனைய மூவரும் நீரில் மூழ்கி மாயமாகியுள்ளனர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர். 

No comments

Powered by Blogger.