Header Ads



ஓமானில் உயிரிழந்த இலங்கையர்ளுக்கு 28 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான இழப்பீடு


கடந்த 12 மாத காலத்தில் ஓமானில் உயிரிழந்த இலங்கையர்களின் குடும்பங்களுக்கு 28 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான இழப்பீட்டுத் தொகையை  பெற்றுக்கொடுப்பதற்கு ஓமானிலுள்ள இலங்கைத் தூதரகம் நடவடிக்கை எடுத்துள்ளது. 


கடந்த ஆண்டின் ஓகஸ்ட் மாதம் முதல் இந்த ஆண்டின் ஓகஸ்ட் மாதம் வரையிலான காலப்பகுதியில் இந்த இழப்பீட்டுத் தொகை அறவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 


மேலும், அத்தொகை கொழும்பிலுள்ள வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சின் தூதரகப் பிரிவு ஊடாக உயிரிழந்தவர்களின் நெருங்கிய உறவினர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

No comments

Powered by Blogger.