Header Ads



ஞானசாரருக்கு 21 வழக்குகள், நாமல் ராஜபக்‌ஷவை திருடன் என விமர்சிப்பவர்கள்


ஞானசார தேரருக்கு விதிக்கப்பட்ட 6 வருட சிறைத்தண்டனை மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவரைத் தேடும் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன. நாட்டின் கௌரவத்துக்காகவும் பிக்குகளுக்காகவும் கிறிஸ்தவ அடிப்படைவாதம் மற்றும் முஸ்லிம் தீவிரவாதத்துக்கு எதிராகவும் அவர் குரல் கொடுத்துள்ளார். அவருக்கு எதிராக சுமார் 21 வழக்குகள் தொடரப்பட்டுள்ளன


நாமல் ராஜபக்‌ஷவை திருடன் என விமர்சிப்பவர்கள், கடந்த காலங்களில் மக்களின் வீடுகளுக்குள் புகுந்து அடையாள அட்டைகள், காதணிகள் மற்றும் சங்கிலிகளை எடுத்துச் சென்ற சம்பவங்கள் தொடர்பில் முதலில் தங்களைப் தாமே உணர்ந்துகொள்ள வேண்டும்.


இன்று மகாநாயக்க தேரர்கள் உட்பட பிக்குகள் அவமதிக்கப்படுகின்றனர். பௌத்த சாசனத்துக்கு எதிராக தாக்குதல் நடத்தப்படும் போது அனைத்து பிக்குகளும் ஒன்றிணைய வேண்டும். அதற்காகவே பிக்கு முன்னணியை உருவாக்கியுள்ளோம். அனுராதபுர பேரணியில் மூன்று மாவட்டங்களில் இருந்து 400க்கும் அதிகமான பிக்குகள் கலந்து கொண்டனர். 


 இதேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் 

No comments

Powered by Blogger.