அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 160 உறுப்பினர்கள் மீதும் ஊழல் குற்றச்சாட்டு கிடையாது
அரசாங்கம், பழிவாங்கும் நோக்கில் செயற்படவில்லை. தற்போதைய அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 160 உறுப்பினர்கள் மீதும் எந்தவித ஊழல் அல்லது குற்றச்சாட்டுகளும் கிடையாது என பிரதியமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
குற்ற இராச்சியமாக மாறியிருந்த இலங்கையை சரியான பாதைக்குக் கொண்டுவருவதற்கும், திருடர்கள் மற்றும் ஊழல்வாதிகளுக்குத் தண்டனை வழங்குவதற்கும் கிடைத்த மக்கள் ஆணையையே அரசாங்கம் நிறைவேற்றி வருகிறது.
தற்போதைய அரசாங்கத்தின் கீழ் சட்டம் அனைவருக்கும் சமமாகவே நடைமுறைப்படுத்தப்படுகிறது. நிலக்கரி இறக்குமதி மோசடி தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக ஆணைக்குழு நியமிக்கப்பட்ட போது, அமைச்சர் குமார ஜயகொடி பதவி விலகியமை அரசாங்கம் சட்டத்திற்கு அளிக்கும் மரியாதையைக் காட்டுவதாக தெரிவித்துள்ளார்.

Post a Comment