தாய்லாந்தில் 10,000 இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு
தொழிலாளர் ஒத்துழைப்பு மற்றும் தாய்லாந்தில் இலங்கைத் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குதல் தொடர்பான முக்கியத்துவம் வாய்ந்த இரு ஒப்பந்தங்கள் இன்று (14) பாங்கொக்கில் இலங்கை மற்றும் தாய்லாந்து நாடுகளுக்கிடையே கைச்சாத்திடப்பட்டன.
இந்த ஒப்பந்தங்களின் மூலம் பாதுகாப்பான, முறையான மற்றும் இரு நாடுகளுக்கும் பயனளிக்கும் வகையில் தொழிலாளர் இயக்கத்தை மேம்படுத்துவதுடன், இலங்கைத் தொழிலாளர்களின் உரிமைகள், நலன் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
முதற்கட்டமாக 10,000 இலங்கைத் தொழிலாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு தாய்லாந்து அனுமதி வழங்கியுள்ளது.

Post a Comment