Header Ads



UAE யில் உள்ள அமெரிக்க இலக்குகளை, தாக்கிய ஈரான்


ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அல் மின்ஹாத் (Al Minhad) தளத்தில் அமெரிக்க ராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தியதாக ஈரான் ராணுவம் தெரிவித்துள்ளது.


ஈரானிய செய்தி நிறுவனங்கள் வெளியிட்ட அறிக்கையின்படி, "அந்தத் தளத்தை நோக்கி டஜன் கணக்கான ட்ரோன்கள் ஏவப்பட்டது. அத்தளத்தில் அமெரிக்கப் படைகளும் ஹெலிகாப்டர்களும் நிறுத்தப்பட்டிருந்த இடங்களை குறிவைத்தே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான்  ராணுவம் கூறியது.


ஈரானின் லாரக் (Larak) தீவில் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட இஸ்லாமிய புரட்சிகர காவலர் படையின் (IRGC) உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களுக்கான பழிவாங்கும் நடவடிக்கையாகவே இந்தத் தாக்குதல் அமைந்ததாக ஈரான்  குறிப்பிட்டது. 

No comments

Powered by Blogger.