Header Ads



இலங்கையில் பயணிகள் ட்ரோன் (Passenger Drone) சேவை


 இலங்கையில் பயணிகள் ட்ரோன் (Passenger Drone) சேவையை அடுத்த மாதம் சோதித்துப் பார்க்கத் திட்டமிட்டுள்ளதுடன், அடுத்த 6 மாதங்களுக்குள் வர்த்தக ரீதியிலான சேவைகளைத் தொடங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பிரதி அமைச்சர் ருவன் கொடித்துவக்கு தெரிவித்துள்ளார்.


முதற்கட்டத் திட்டத்தின் கீழ், இந்த பயணிகள் ட்ரோன்கள் 25 கிலோமீற்றர் தூரம் வரை பயணங்களை மேற்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்படவுள்ளதுடன், சுற்றுலாத் தலங்களை இலக்காகக் கொண்ட இரண்டு வான்வழி மார்க்கங்களும் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த முன்னோடித் திட்டத்தின் முதற்கட்ட நடவடிக்கைகளாக கொழும்பிலிருந்து தெற்கு கடலோரப் பகுதி வரையிலும், கட்டுநாயக்க சர்வதேச வானூர்தி நிலையத்திலிருந்து கொழும்பு துறைமுக நகரம் (Port City) வரையிலும் வான்வழி மார்க்கங்களை அமைப்பதில் கவனம் செலுத்தப்படவுள்ளது.

இந்த வகை ட்ரோன்கள் தரையிறங்குவதற்கும் வானேறுவதற்கும் மிகக் குறைந்த இடமே போதுமானது என்பது இதன் முக்கியமான சிறப்பம்சம் எனச் சுட்டிக்காட்டிய பிரதி அமைச்சர், ஆரம்ப சோதனைகளைத் தொடர்ந்து 6 மாத காலத்துக்குள் நாட்டில் வர்த்தக ரீதியிலான பயணிகள் ட்ரோன் சேவையை முறைப்படியாக நிறுவ அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.