Header Ads



தமிழ்ப் பெண்களை இழிவுபடுத்தும் கருத்துக்கள் - அமைச்சரிடம் முறையிட்ட தமிழ் Mp க்கள்


கல்முனை ஆதார வைத்தியசாலையில் எழுந்த தாதியர்களின் சீருடை தொடர்பான விவகாரம் பொதுவெளியிலும் சமூக ஊடகங்களிலும் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ள நிலையில், இது குறித்துச் அமைச்சர்  நலிந்த ஜயதிஸ்ஸ அவர்களுடன் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று அவசர கலந்துரையாடலில் ஈடுபட்டது.


​அம்பாறை மாவட்டத்தில் இன நல்லிணக்கத்தைப் பேணுதல், தமிழ் மக்களின் உணர்வுகளை மதித்தல் மற்றும் வைத்தியசாலை நிர்வாகத்தின் சீரான செயற்பாட்டை உறுதி செய்யும் நோக்கோடு இப் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று 19.08.2026 சுகாதார அமைச்சரை நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்.


சில சமூக ஊடகங்களில் தமிழ்ப் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் வெளியான கருத்துக்கள் தொடர்பில் தனது கவலையை வெளியிட்ட அவர், மக்கள் மத்தியில் எழுந்துள்ள உணர்வுகளை அமைதியான வழியில் கையாண்டு இவ்விவகாரத்திற்கு ஒரு சுமூகமான தீர்வை எட்டுமாறு அமைச்சரிடம் எடுத்துரைத்தனர்.


No comments

Powered by Blogger.