Header Ads



இலங்கைக்கு வழங்கப்படும் GSP வரிச் சலுகை, பல்வேறு நிபந்தனைகள் விதிக்க EU திட்டம்


இலங்கைக்கு வழங்கப்படும் GSP வரிச் சலுகையை தொடர்ந்து வழங்குவதற்கு, ப்பட வேண்டுமென ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய மதிப்பீட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதற்கமைய, இன மற்றும் மத சிறுபான்மையினர்,  LGBTQ பிரிவினர் உள்ளிட்டவர்களைப் பாதுகாக்கும் வகையில் விரிவான பாகுபாடு எதிர்ப்புச் சட்டங்களை இயற்ற வேண்டும் எனவும் அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.


இணக்கத்துடன் இடம்பெறும் ஒரே பாலின உறவுகளை குற்றமாகக் கருதாத வகையில் சட்டங்களில் மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


மரண தண்டனையை முழுமையாக ஒழிக்கும் நோக்கில் உத்தியோகபூர்வ இடைநிறுத்தத்தை அறிமுகப்படுத்த வேண்டும் என்றும், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்கி சர்வதேச தரங்களுக்கு ஏற்ப புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களை உருவாக்க வேண்டும் என்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் அறிக்கை வலியுறுத்துகிறது.


இலங்கைக்கு தற்போது வழங்கப்படும் GSP சலுகை எதிர்வரும் டிசம்பர் 31ஆம் திகதி நிறைவடையவுள்ளது. அடுத்த 10 ஆண்டுகளுக்கான புதிய கட்டமைப்பு ஜனவரி முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளதுடன், புதிய கொள்கைகளை நடைமுறைப்படுத்த இலங்கைக்கு இரண்டு வருட கால அவகாசமும் வழங்கப்படவுள்ளது. (Hiru) 

No comments

Powered by Blogger.