கன்னத்தில் அறைந்த டீச்சரின் மடியிலேயே மயங்கி விழுந்து பலியான எல்கேஜி மாணவன்.. நெஞ்சை உலுக்கும் காட்சி
விசாகப்பட்டினத்தில் உள்ள 'லிட்டில் கார்டன்' பள்ளியில், வியாழக்கிழமையன்று மயங்கி விழுந்த 6 வயது சிறுவன் பிரணய் தேஜா உயிரிழந்தான்.
வீட்டுப்பாடத்தை முடிக்காததால் ஆசிரியர் ஒருவரால் அவன் தாக்கப்பட்டதாக அவனது குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர். சிறுவன் மயங்கி விழுவதற்கு முன்பு, அந்த ஆசிரியர் அவனைத் தாக்கும் காட்சிகள் சிசிடிவி (CCTV) பதிவில் பதிவாகியுள்ளன. (அந்த வீடியோ,, பார்க்கும் போது மனசு பதைபதைக்கிறது)
பிரணய் 'கிங் ஜார்ஜ்' மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டான்; அங்கு அவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். இதற்குப் பொறுப்பானவர்கள் மற்றும் பள்ளி நிர்வாகம் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆந்திரப் பிரதேச அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Post a Comment