ஹோர்முஸ் தடையினால், இலங்கை ஊடாக புதிய சரக்கு போக்குவரத்து பாதை
இத்தாலியில் தயாரிக்கப்பட்ட அதிநவீன லெம்போர்கினி ரகத்தைச் சேர்ந்த 14 சொகுசு கார்கள், இலங்கை ஊடாக டுபாய் மற்றும் கட்டார் நாடுகளுக்கு கொண்டு செல்லப்படவுள்ளன.
இத்தாலியில் இருந்து கடல் மார்க்கமாக அந்த வாகனங்கள் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டன. அங்கிருந்து 40 அடி நீளமுடைய 7 கொள்கலன்களில் ஏற்றப்பட்டு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.
அதன் பின்னர், சரக்கு விமானத்தில் ஏற்றப்பட்டு, கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து டுபாய் மற்றும் கட்டாரின் தோஹா நகரங்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த கார்கள் ஒவ்வொன்றின் குறைந்தபட்ச விலை இலங்கை நாணயத்தில் 50 கோடி ரூபா. ஸ்போர்ட்ஸ் பிரிவைச் சேர்ந்த ஒரு காரின் விலை சுமார் 100 கோடி ரூபாய். இந்த மோட்டார் வாகனங்களை ஏற்றிய விமானம் இன்று டுபாய் மற்றும் தோஹா நோக்கி கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்படவுள்ளது.

Post a Comment