ஹோர்முஸ் நீரிணை திறப்பு: ஈரான் விதிக்கும் புதிய நிபந்தனைகள்
ஹார்முஸ் நீரிணையைத் திறப்பதற்கு முன்னதாக, அமெரிக்கா தனது போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று ஈரானின் தேசியப் பாதுகாப்பு கவுன்சில் வலியுறுத்தியுள்ளது.
அதன் கோரிக்கைகள்:
1. இனி ஒருபோதும் ஈரானை அச்சுறுத்தக்கூடாது; அதன் புனிதமான விழுமியங்களை அவமதிக்கக்கூடாது.
2. ஈரான் மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கு எதிரான போரை நிரந்தரமாக நிறுத்த வேண்டும்.
3. கடற்படை முற்றுகையை நீக்க வேண்டும்; அத்துடன் ஈரானைச் சுற்றியுள்ள பிராந்தியத்திலிருந்து அமெரிக்கக் கடற்படை மற்றும் விமானப்படையை விலக்கிக்கொள்ள வேண்டும்.
4. ஈரான் மீது நடத்தப்பட்ட இரண்டு ஆக்கிரமிப்புப் போர்களுக்கும் உரிய இழப்பீட்டை வழங்க வேண்டும்.
5. ஈரான் மீதான சட்டவிரோதத் தடைகளை நீக்க வேண்டும்.
6. முடக்கப்பட்டுள்ள ஈரானின் சொத்துக்களை எவ்வித நிபந்தனையுமின்றி விடுவிக்க வேண்டும்.

Post a Comment