தேரர் தங்கியிருந்த அறையின் குளியலறையில் பெண்களுடையதாக நீண்ட தலைமுடிகள்
சம்பவம் இடம்பெற்றதாகக் கூறப்படும் இடத்தில் இருந்து பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட பாயில் காணப்பட்ட உயிரியல் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது, அவை பல்லேகம ஹேமரத்ன தேரரின் DNA மாதிரியுடன் பொருந்துவதாகத் தெரியவந்துள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுமி தனது முன்னைய வாக்குமூலத்தில், கூறப்பட்ட சில விடயங்களை குறித்த DNA பரிசோதனை முடிவு விஞ்ஞான ரீதியாக உறுதிப்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேரர் தங்கியிருந்த அறையின் குளியலறையில் இருந்து பெண்களுடையதாக சந்தேகிக்கப்படும் நீண்ட தலைமுடிகள் சிலவற்றையும் விசாரணை அதிகாரிகள் கண்டுபிடித்திருந்தனர்.
எனினும், அந்த தலைமுடிகள் பாதிக்கப்பட்ட சிறுமியுடையவை அல்ல என்பது DNA பரிசோதனையின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பாதிக்கப்பட்ட சிறுமியைத் தவிர வேறு பெண்களும் அந்த இடத்திற்கு வந்திருக்கக்கூடும் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக குறித்த மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களமும் தற்போது விசேட கவனம் செலுத்தி வருவதாகவும், வழக்கு எதிர்வரும் ஜனவரி 08ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment