22 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை கொண்டு வருவதற்கு முன்னர்...
22 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை கொண்டு வருவதற்கு முன்னர் அரசாங்கம் மக்களுக்காக செய்ய வேண்டிய பல முக்கிய பணிகள் இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொதுமக்கள் தற்போது அரசியலமைப்பு திருத்தத்தை விட முக்கியமான பல பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றது. மக்களுக்கு இந்தப் பிரச்சினையை விட வேறு பல பிரச்சினைகள் உள்ளன.
சிலர் உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை தேவைகளுக்காக சிரமப்படுகின்றனர். அந்தப் பிரச்சினைகளை தீர்க்காமல் தேவையற்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண முயற்சிப்பதுதான் பிரச்சினையாக உள்ளது. மக்களின் அன்றாட வாழ்க்கையை பாதிக்கும் பொருளாதார மற்றும் சமூகப் பிரச்சினைகளுக்கு முதலில் தீர்வு காணப்பட வேண்டும் என்பதே எனது நிலைப்பாடாகும்” என மகிந்த தெரிவித்துள்ளார்.

Post a Comment