Header Ads



மஹ்தியின் மரணத்திற்கு இன்றும் பாராளுமன்றத்தில் நீதிகேட்ட முஜுபுர் ரஹுமான்


கொழும்பு  ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற மூன்று வயது சிறுவன் 2023ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் திகதி  உயிரிழந்த சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் முஜுபுர் ரஹுமான் நாடாளுமன்றத்தில் இன்று (21) கேள்வி எழுப்பியுள்ளார்.


மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவனுக்கு ஸ்டென்ட் (Stent) மாற்றப்பட்டதாகவும், அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட சிக்கல் காரணமாக ஸ்டென்ட்கள் அகற்றப்பட்ட பின்னர் சிறுவன் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிகிச்சையுடன் தொடர்புடைய மருத்துவர்கள், அவர்களுக்கு உதவியவர்கள் மற்றும் ஆய்வகப் பணியாளர்கள் உள்ளிட்ட சிலர், சம்பவத்திற்குப் பின்னர் நாட்டைவிட்டு வெளியேறி தற்போது வெளிநாடுகளில் வசித்து வருவதாகவும் நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சிறுவனின் மரணம் தொடர்பில் சுகாதார அமைச்சினால் விசாரணை நடத்தப்பட்ட போதிலும், அதன் அறிக்கை இதுவரை பெற்றோரிடம் வழங்கப்படவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் இதுவரை மூன்று முறை கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. See less

No comments

Powered by Blogger.