Header Ads



போதைப்பொருள் விநியோகித்த சிறைச்சாலை அதிகாரி பிடிபட்டான்


பொரளை மெகசின் சிறைச்சாலைக்கு போதைப்பொருள் விநியோகிப்பதாகக் கூறப்படும் சிறைச்சாலை அதிகாரியொருவர் கல்கிசைக்கு பொறுப்பான குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார். 


அவருடன் சேர்த்து சுமார் 20 லட்சம் ரூபாய் பெறுமதியுடைய 100 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 20 கிராம் ஹெரோயின் என்பனவும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. 


தெஹிவளையைச் சேர்ந்த 3​2 வயதுடைய நபர் ஒருவர் முதன்முதலாக இந்த போதைப்பொருளுடன் கல்கிசை பகுதியில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார். 


மெகசின் சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வரும் கைதி ஒருவர் வாட்ஸ்அப் அழைப்பு மூலம் போதைப்பொருளை பெற்றுக் கொள்ள வேண்டிய இடம் குறித்த தகவலை வழங்கியதாகவும், அதற்கமையவே இந்தப் போதைப்பொருள் பொதியைப் பெற்றுக்கொண்டதாகவும் சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது

No comments

Powered by Blogger.