பஷார் அல்-அசாத்திற்கு மரண தண்டனை
சிரியாவின் முன்னாள் ஜனாதிபதி பஷார் அல்-அசாத் உட்பட மூவருக்கு உள்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. உள்நாட்டுப் போரின்போதான ‘போர்க்குற்றங்கள்’ மற்றும் ‘மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள்’ ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் மேற்கண்ட தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பஷார் அல்-அசாத் சிரியாவில் இல்லாத நிலையில் இந்த மரண தண்டனைத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. டிசம்பர் 2024-ல் கிளர்ச்சியாளர்கள் தலைநகர் டமாஸ்கஸைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து, அசாத் தனது குடும்பத்துடன் ரஷ்யாவின் மொஸ்கோவிற்குத் தப்பிச் சென்றார்.
பஷார் அல்-அசாத்துடன் சேர்ந்து அவரது தம்பியான மாஹெர் அல்-அசாத் மற்றும் முன்னாள் பாதுகாப்பு அதிகாரி மற்றும் அசாத்தின் உறவினரான ஆதிப் நஜீப் ஆகியோருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Post a Comment