Header Ads



இலங்கை பாதுகாப்புப் படைகள் உலகளவில் செயற்படும் திறனைக் கொண்டுள்ளன


பாதுகாப்புப் படைகள் விஞ்ஞான மற்றும் தொழில்முறைத் திறன்களில் உயர்  தரத்தைக் கொண்ட படைகளாக உலகளவில் செயற்படும் திறனைக் கொண்டுள்ளன என்றும், அதற்காக அவர்களைத் தயார்படுத்துவதும் தேவையான வசதிகளை வழங்குவதும் அத்தியாவசியமானது என்றும் ஜனாதிபதி அநுரகுமார  சுட்டிக்காட்டினார்.


பாதுகாப்பு அமைச்சின் 2026ஆம் ஆண்டுக்கான திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு மற்றும் 2027 வரவு செலவுத் திட்ட பூர்வாங்க  கலந்துரையாடலில் இன்று (05) ஜனாதிபதி அலுவலகத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.


2026ஆம் ஆண்டிற்காக பாதுகாப்பு அமைச்சுக்கு மொத்தம் 530 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், இதில் 379 பில்லியன் ரூபாய் மீண்டுவரும் செலவினங்களாகவும்  , 151 பில்லியன் ரூபாய் மூலதனச் செலவினங்களாகவும் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கமைய, ஸ்ரீலங்கா இராணுவம், கடற்படை, விமானப்படை, சிவில் பாதுகாப்பு திணைக்களம் மற்றும் கெடட் அதிகாரிகளுக்காக செயற்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ள வளிமண்டலவியல் திணைக்களம், கரையோரப் பாதுகாப்பு திணைக்களம், அனர்த்த முகாமைத்துவ பிரிவு ஆகியவற்றால் நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்களின் முன்னேற்றம் குறித்து இங்கு விரிவாக ஆராயப்பட்டது.


ஜனாதிபதி ஊடகப் பிரிவு 2026-08-05


No comments

Powered by Blogger.