நீதிமன்ற அவதூறு குற்றச்சாட்டின்கீழ் அறிக்கையிடுமாறு நீதவான் உத்தரவு
விமல் வீரவங்ச, உதய கம்மன்பில, சுகீஷ்வர பண்டார, திலித் ஜயவீர, அசங்க நவரத்ன மற்றும் சிரேஷ்ட விரிவுரையாளர் மஹிந்த பத்திரன ஆகிய அரசியல் செயற்பாட்டாளர்களுக்கு எதிராக நீதிமன்ற அவதூறு குற்றச்சாட்டின்கீழ் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் அறிக்கையிடுமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (5) உத்தரவிட்டுள்ளது.
பொலிசாரின் தடைகளையும் நீதிமன்ற உத்தரவுகளையும் மீறி அவர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றதாக கூறப்படுகிறது.

Post a Comment