இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்ட நிலந்த பிரேமரத்னவுக்கு ஜனாதிபதி வாழ்த்து
இலங்கை இராணுவத்தின் 26 ஆவது இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்ட லெப்டினன்ட் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன, ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (05) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவைச் சந்தித்தார்.
புதிய இராணுவத் தளபதியாக பொறுப்பேற்றதன் பின்னர், லெப்டினன்ட் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன ஜனாதிபதியை உத்தியோகபூர்வமாகச் சந்திக்கும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.
தனது பதவியைப் பொறுப்பேற்றதன் பின்னர், அரச தலைவரைச் சந்திக்கும் சம்பிரதாயப்படி ஜனாதிபதி அலுவலகத்திற்கு வருகை தந்த இராணுவத் தளபதி, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன் சம்பிரதாய ரீதியாக நினைவுச் சின்னங்களைப் பரிமாறிக்கொண்டதுடன், இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்ட நிலந்த பிரேமரத்னவுக்கு ஜனாதிபதி தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

Post a Comment