ஹஜ் பயண அரசு மானியம் ரூ.35,000 ஆக உயர்வு
தமிழ்நாடு மாநில ஹஜ் கமிட்டி மூலம் முதல்முறையாக புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு வழங்கப்படும் 25,000 ரூபாய் மானியம் நமது அரசால் 35,000 ரூபாயாக உயர்த்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
நடப்பு நிதி ஆண்டுக்கான (2026-27) பொது பட்ஜெட்டை, தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்த நிதியமைச்சர் மரிய வில்சன், சிறுபான்மையினர் நலன்கள் தொடர்பான முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
அவர் தனது பட்ஜெட் உரையில், “மதச்சார்பற்ற சமூக நீதி அரசாகவும், சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாப்பதில் ஒரு முன்னோடி மாநிலமாகவும் தமிழ்நாடு திகழும்.
கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் மகளிர் உதவும் சங்கங்கள் 1.05 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் கூடுதலாகத் துவக்கப்படும். மேலும், கபர்ஸ்தான்கள், கல்லறைத் தோட்டங்களின் உட்கட்டமைப்பினை மேம்படுத்துவதற்காக திருத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 34 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என தெரிவித்தார்.

Post a Comment