நிலைமை தற்போது அமைதியாக உள்ளது, கைதிகளின் உறவினர்கள் வெளியேற வேண்டும்
மஹர சிறைச்சாலையினுள் ஏற்பட்ட பதற்றநிலை தொடர்பில் உடனடியாக விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் என சிறைச்சாலைகள் திணைக்கள பேச்சாளர் கஜநாயக்க தெரிவித்துள்ளார்.
மஹர சிறைச்சாலையினுள் ஏற்பட்ட பதற்றநிலை தொடர்பில் இன்று (02) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கைதிகளால் சிறைச்சாலைக்குள் பல்வேறு கட்டடங்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சிறைச்சாலையின் சமையலறை, புனர்வாழ்வுக் கட்டடம், அலுவலகம், தலைமை சிறைக்கட்டுப்பாட்டாளர் அலுவலகம் மற்றும் சிறைச்சாலை வைத்தியசாலை ஆகியன சேதமடைந்துள்ளது.
அதன்படி, நிலைமை தற்போது அமைதியாக இருப்பதாகவும், கைதிகளின் உறவினர்கள் அமைதியாக குறித்த இடத்தை விட்டு வெளியேற வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Post a Comment