என் மகன்களில் ஒருவரை படுகொலை செய்ய ஈரான் முயற்சி செய்தது - நெதன்யாகு
இஸ்ரேல் மீது தொடர் அச்சுறுத்தல்களை ஏற்படுத்தி வரும் ஈரான், என் மகன்களில் ஒருவரை படுகொலை செய்ய முயற்சி செய்தது என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குற்றம்சாட்டியுள்ளார்.
இஸ்ரேல் தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு தொலைபேசி வாயிலாக அளித்த பேட்டியில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அதில் அவர் பேசும்போது, “ஈரான் அரசு எனது மகன்களில் ஒருவரை இலக்கு வைத்து படுகொலை செய்ய முயற்சித்த சம்பவம் நடந்துள்ளது.
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு இரு மகன்களும் ஒரு மகளும் உள்ள நிலையில், ஈரானால் எந்த மகன் குறிவைக்கப்பட்டார், இந்த சதி முயற்சி எப்போது நடைபெற்றது என்ற விவரங்களை அவர் விரிவாக வெளிப்படுத்தவில்லை

Post a Comment