Header Ads



வழக்குகளை விசாரிக்கும் போது ராஜபக்சக்களும், சகாக்களும் கலக்கமடைவது ஏன்..?


"வழக்குகளை விரைவாக விசாரித்து நீதிமன்றத்தால் தண்டனை வழங்கப்படும்போது, நாமல் ராஜபக்ச, ராஜபக்சக்கள் மற்றும் அவர்களின் சகாக்கள் கலக்கமடைவது ஆச்சரியத்துக்குரியதல்ல. ஆனால், எதிர்க்கட்சித் தலைவர் உட்பட ஐக்கிய மக்கள் சக்தியினர் ஏன் கலக்கமடைய வேண்டும்?


எதிர்க்கட்சித் தலைவர் தற்போது ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனைகளைக் கேட்கின்றார். அவரது ஆலோசனைகளைப் பெற்றால், சஜித் பிரேமதாச தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவராகவே இருக்க நேரிடும்.


 நாமல் ராஜபக்ச, 'நாங்கள் யார் என்று தெரியும் தானே, பின்கதவால் ஓடுபவர்கள் அல்ல' என்று சபையில் சண்டித்தனம் பேசுகின்றார். ராஜபக்சக்கள் யார் என்பதை நாட்டு மக்கள் அறிவார்கள். தாஜூதீன் படுகொலை, லசந்த விக்கிரமதுங்க படுகொலை என எண்ணற்ற படுகொலைகளுக்கும் இவர்களுக்கும் தொடர்புண்டு.

 - பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க - 

No comments

Powered by Blogger.